ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தீர்மானங்களும் நாட்டினதும் மக்களினதும் வெற்றியை இலக்காகக் கொண்டதாக அமைவது முக்கியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவானோருடன் நேற்று நடத்திய விசேட சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இணக்கப்பாட்டுடன் செயற்பட்டால் மாத்திரமே நாட்டையும் மக்களையும் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என்பதையும் அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவான புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.
புதிய உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவிப்பது மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள தேவைகளை இனங்கண்டு நாட்டிற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் மேற்கொள்ளக்கூடிய பொறுப்புக்களை இதன் போது ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாடு மற்றும் மக்களின் வெற்றியை நோக்கமாகக் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தேசிய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இணக்கப்பாட்டுடன் செயற்பட்டால் மாத்திரமே நாட்டையும் மக்களையும் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணைந்து அரசாங்கம் என்ற வகையில் செயற்படுவது இதில் முக்கிய மாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமுகமான திறந்த கலந்துரையாடலாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வின் போது தேசிய அரசாங்கமாக செயற்படுவது தொடர்பில் உறுப்பினர்கள் விரிவான கலந்துரையாடி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டு ள்ளார். இது தொடர்பில் தமக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கென முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அக்குழுவிற்கு ரஞ்சித் சியம்பலாபிடிய செயலாளராகவும் நியமிக்கப்பட் டுள்ளார். கட்சியின் சிரேஷ்ட உறுப் பினர்களும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப் பிடத்தக்கது.