23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

பாராளுமன்றத்திற்குத் தெரிவான தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள்

parliament 1நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களை உள்ளடக்கிய கட்சிகளாக போட்டியிட்ட இ.த.அ.க (த.தே.கூ), ஈ.பி.டி.பி மற்றும் முஸ்லிம்களை உள்ளடக்கிய கட்சிகளாக ஶ்ரீ.ல.மு.கா மற்றும் அ.இ.ம.கா என்பன தனியாகவும் ஐ.தே.கவுடன் இணைந்தும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது

 இதில் த.தே.கூ. தேசியப்பட்டியல் ஆசனங்கள் இரண்டுடன் 16 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி 01 ஆசனத்தையும், ஶ்ரீ.ல.மு.கா தனித்து 01 ஆசனத்தையும் ஐ.தே.கவுடன் இணைந்து 04 ஆசனங்களையும் அ.இ.ம.கா, ஐ.தே.கவுடன் இணைந்து 04 ஆசனங்களைக் கைப்பற்றியது.

 இதேவேளை ஐ.ம.சு.மு விலிருந்து ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினராக கே.கே. மஸ்தான் 7,298 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார். அத்துடன் இக்கட்சியிலிருந்து எவ்வித தமிழ் பிரதிநிதியும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 தேர்தலில் வெற்றியீட்டி எட்டாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள். 

 (தேசியப் பட்டியலில் தெரிவாகவுள்ளோர் இணைக்கப்படவில்லை)

 

கொழும்பு மாவட்டம்

ஐ.தே.க

1. எஸ்.எம். மரிக்கார் 92,526

2. முஜிபுர் ரஹ்மான் 83,884

3. மனோ கணேசன் 69,064

 

கேகாலை மாவட்டம்

ஐ.தே.க

4. கபீர் ஹாசிம் 109,030

 

கண்டி மாவட்டம்

ஐ.தே.க

5. எம்.எச்.ஏ. ஹலீம் 111,011

6. ரஊப் ஹக்கீம் 102,186

7. வேலு குமார் 62,556

 

அநுராதபுரம் மாவட்டம்

ஐ.தே.க

8. ஏ.ஆர். இஷாக் 44,626

 

வன்னி மாவட்டம்

த.தே.கூ

9. எஸ். நிமலநாதன் 34,620

10. எஸ். அடைக்கலநாதன் 26,397

11. சிவசக்தி ஆனந்தன் 25,027

12. சிவமோகன் 18,412

 

ஐ.தே.க

13. ரிஷாட் பதியுதீன் 26,291

 

ஐ.ம.சு.மு

14. கே.கே. மஸ்தான் 7,298

 

மட்டக்களப்பு மாவட்டம்

த.தே.கூ

15 ஜி. ஶ்ரீநேசன் 48,821

16. எஸ். விஜேந்திரன் 39,321

17. எஸ். யோகேஸ்வரன் 34,039

 

ஶ்ரீ.ல.மு.கா

18. அலி சாஹிர் மெளலானா 16,385

 

ஐ.தே.க

19. எம்.எஸ்.எம் அமீர் அலி 16,611

 

திகாமடுல்லை மாவட்டம்

ஐ.தே.க

20. பைஸல் காசிம் 61,401

21. எச்.எம்.எம் ஹரீஸ் 59,433

22. எம்.ஐ.எம். மன்சூர் 58,536

 

திருகோணமலை மாவட்டம்

ஐ.தே.க

23. எம். எஸ்.எம். மஹ்ருப் 35,456

24. இம்ரான் மஹ்ரூப் 32,582

 

த.தே.கூ

25. ஆர். சம்பந்தன் 33,834

 

யாழ்ப்பாணம் மாவட்டம்

த.தே.கூ

26. எஸ். ஶ்ரீதரன் 72,058

27. மாவை சேனாதிராஜா 58,782

28. எம்.ஏ. சுமந்திரன் 58,043

29. ரி. சித்தார்த்தன் 53,740

30. இ. சரவணபவன் 43,289

 

ஐ.தே.க.

31. விஜயகலா மகேஸ்வரன் 13,071

 

ஈ.பி.டி.பி

32. டக்ளஸ் தேவானந்தா 16,399

 

பதுளை மாவட்டம்

ஐ.தே.க

33. அரவிந்த குமார் 53,741

34. வடிவேல் சுரேஷ் 52,318