08042025Tue
Last update:Tue, 07 Jan 2025

கொழும்பு – கண்டி நெடுஞ்சாலை நிர்மாணத்தை இன்று ஜனாதிபதியும், பிரதமரும் ஆரம்பித்துவைத்தனர்

highwayகொழும்பு கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளின் முதற் கட்ட பணிகள் இன்று (03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 இதன் முதல் கட்ட பணிகளில், கடவத்தையிலிருந்து மிரிகம வரையான பாதை நிர்மாணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இதன் இரண்டாம் கட்டத்தில் மிரிகமவிலிருந்து குருணாகல் பாதையும், மூன்றாம் கட்டமாக குருணாகலிலிருந்து கண்டி வரையும் பாதை நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.