23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

சிறுநீரக நோயை கட்டுப்படுத்த சர்வதேச உதவியைக் கோருகிறார் ஜனாதிபதி

tkn 07 30 nt 15 ndk 1இலங்கையில் விவசாயிகள் மிக மோசமான முறையில் முகங்கொடுத்துள்ள சிறுநீரக நோயிலிருந்து அவர்களை மீட்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்தின் உதவியைக் கோரியுள்ளார்.

இலங்கையுடனான நட்பு நாடுகள் அனைத்திலிருந்தும் இந்த உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றபோதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இலங்கையில் தற்போது சில பிரதேசங்களில் 40,000ற்கும் மேற்பட்டோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் காரணமாக இருப்பது வருடாந்தம் ஆயிரம் பேரளவில் மரணிக்கிறார்கள். இவ்வாறான சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது

குடிநீர் பிரச்சினையே என தெரிவித்த ஜனாதிபதி, இதற்கான தீர்வைக் காண் பதற்காக சர்வதேசத்தின் உதவி அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென நாடு முழுவதிலுமுள்ள ஆஸ்பத்திரிகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனால் பெரும் பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுநீரக நோய் தொடர்பாக இலங் கைக்கு பெற்றுக்கொடுக்கக் கூடிய உதவிகளை உச்ச அளவில் பெற்றுக் கொடுப்பதற்கு ஆயத்தமாக இருப் பதாக அங்கு வருகை தந்திருந்த தூது வர்கள் அனைவரும் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

உண்மை யான ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி செயற்படுத்தியுள்ள திட்டத்துக்கு தூதுவர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

சிறுநீரக நோய் பரவுவதற்கான அடிப் படை காரணம் என்ன என்பது தொடர்பாக தொடர்ந்தும் ஆய்வுகளை நடத்துவதற்கு இலங்கைக்கு உதவி வழங்க உலக சுகாதார ஸ்தாபனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட வதிவிடப் பிரதிநிதியும் உறுதியளித்தார்.

அத்துடன், இலங்கையில் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்காக பெற்றுக் கொடுக்கும் உதவிகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து வழங்குவதுடன், அதனை மேலும் அதிகரிக்க கவனம் செலுத்துவ தாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட இந்திய உயர்ஸ் தானிகர் வை.கே.சிங்கா கருத்துத்தெரி விக்கையில், பொல்கஹாவெல, குண்டச ¡லை மற்றும் களுத்துறை பகுதியில் ஆரம்பிக்கப் பட்டுள்ள குடிநீர் வழங்கல் திட்டத்துக்கு உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 60,000 பேருக்கு நிதியுதவிகள் வழங் குவதற்கு ஜப்பான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கு குடிநீர் பெற்றுக்கொடுக்கும் திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய தூதுவரிடம் தெரிவித்த போது அவுஸ்திரேலிய அரசு இத் திட்டத்துக்கு முழுமையான உதவியை செய்வதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, ரவூப் ஹக்கீம், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபயக்கோன் உட்பட வெளிநாட்டுத் தூதுவர்களும் கலந்து கொண்டனர்