17052024Fri
Last update:Wed, 08 May 2024

இலங்கைக்கு மீண்டும் ஜி. எஸ். பி. சலுகை வழங்க பிரிட்டன் இணக்கம்

Ministry of Foreign Affairs 1இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்க ளுக்கு பிரிட்டன் மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

 2015 ஜுலை முதல் இது நடைமுறைக்கு வருவதுடன் ஏற்கனவே 2013 ஜுலை நிறைவு பெற்றிருந்த காலத்திலிருந்து 2015 வரையில் ஏற்றுமதி செய்த பொருட்களுக்கும் ஜீ. எஸ். பீ. வரிச் சலுகையை பெற்றுக்கொடுக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.

நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த அவர், ஐரோப்பிய நாடுகளுக்கு மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவித்த தாவது,

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக ஐக்கிய ராஜ்யத்துக்கு ஏற்றுமதி செய்யும் நாடு களுக்கு இந்த ஜீ. எஸ். பி. வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

1974 வர்த்தக உடன்படிக்கைக்கு இண ங்க 1976 லிருந்து இந்த சலுகை நடை முறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது சில வருடங்களுக்கு மட்டுப்படுத் தப்பட்டதாகவே நடைமுறையிலிருப்பதுடன் குறித்த காலம் முடிவடைந்ததும் மீளவும் அது புதுப்பிக்கப்படுகிறது.

இதற்கிணங்க இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த காலம் 2013 ஜுலையில் முடிவைடைந்தது. இதற்கிண ங்க மீண்டும் 2015 ஜூன் 25 ஆம் திகதி இதற்கான அனுமதி கிடைக்கப்பெற் றுள்ளதுடன் அதில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைச்சாத்திட்டதையடுத்து மீண்டும் உத்தியோகபூர்வமாக அது நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து ஜுலை 29 ஆம் திகதியுடன் இது மீண்டும் அமுலக்கு வருகிறது.

இதற்கிணங்க 2013 ஜுலை 31 ஆம் திகதியுடன் முடிவுற்றிருந்த மேற்படி வரிச் சலுகைக் காலத்தின் பின் 2015 ஜுலை வரை பொருட்களை இலங்கை ஏற்றுமதி செய்திருக்குமானால் அவற்றிற்கான வரிச் சலுகையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை இந்த வரிச்சலு கையைப் பெற்று வந்துள்ளது. இதற்கிணங்க இலங்கையின் உயர் தங்க ஆபரணங்கள். பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பொருட் களை ஏற்றுமதி செய்யப்பட்டு அதன் மூலம் ஜீ. எஸ். பி. வரிச்சலுகை பெற்றுக் கொள் ளப்பட்டது.

இது தொடர்பில் வாஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவிக்கப்பட் டுள்ளதுடன் மீண்டும் இந்த வரிச்சலுகை நடைமுறைக்கு வருகிறது. இலங்கைக்கு மட்டுமன்றி ஏனைய நாடுகளுக்கும் இந்த வரிச்சலுகை வழங்கப்படவுள்ளது.