இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை ஆபத்து மிக்கவர்களாக உருவகப்படுத்தி இங்குள்ள மக்களுக்குக் காண்பிக்கும் பிரசாரங்களில் எதிரணிகள் இப்போது ஈடுபடத் தொடங்கியுள்ளன.
புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளின் ஆதரவாளர்களென தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலர் அப்பட்டமாகக் கூறுகின்ற னர். புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் நலன்களுக்கு எதிராக செயற்படுபவர்களென சிங்கள கடும் போக்காளர்கள் கருத்து முன் வைக்கின்றனர்.
எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவும் இதேவிதமான கருத்தையே முன்வைத்திருக்கிறார். புலம்பெயர் தமிழர்களை இலங் கைக்குள் அழைப்பது நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும், மீண்டும் ஈழத்துக்கான அடித்தளம் இடப்படுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புலம்பெயர் அமைப்புகளுடன் லண்டனில் சமீபத்தில் நடந்த சந்திப் பையடுத்தே எதிரணி தரப்பில் சர்ச்சையும் எதிர்ப்பும் தலைதூக்கி யுள்ளன. புலிகளின் தேவையை நிறைவேற்றும் காரியத்தில் அரசாங் கம் ஈடுபடத் தொடங்கியிருப்பதாக எதிர்த் தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற சுமார் பதினைந்து இலட்சம் பேரையும் புலிகளின் ஆதரவாளர்களாக சித்தரித்துக் காட்டுவதாகவே எதிரணி அரசியல்வாதிகளின் கருத்துகள் அமைந்துள்ளன.
புலம்பெயர் தமிழர்களை புலிகளாக உருவகப்படுத்துவதால் அத் தமிழர்களுக்கு ஆகப் போகின்ற பாதிப்பு எதுவுமே இல்லை. புலம் பெயர் நாடுகளில் அத்தமிழர்கள் தஞ்சமடைந்து வாழ்வதற்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை கடும் போக்காளர்களின் கருத்துகள் பெரிதும் உதவுகின்றன என்பதுதான் உண்மை.
அதேசமயம் மேற்கு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் இலங்கை மீதான வன்மத் தைத் தோற்றுவிப்பதற்கும் சிங்கள கடும் போக்காளர்களின் கருத்துக் கள் வழியேற்படுத்தக்கூடும். எவ்வாறு நோக்குகின்ற போதிலும் புலம்பெயர் தமிழர்கள் மீது தென்னிலங்கை கடும்போக்கு சக்திகள் கொண்டுள்ள எதிர்ப்பானது இலங்கைக்கு எத்தகைய அனுகூலத் தையும் தரப் போவதில்லையென்பது மட்டும் உறுதியானது.
அதே சமயம் தென்னிலங்கை சிங்கள கடும் போக்காளர்கள் தங்களது அரசி யல் ஆதாயம் கருதி புலம்பெயர் தமிழர்களை புலிகளாக உருவகி த்துக் காட்ட முற்படுவதென்பது சிங்கள மக்கள் மத்தியில் தமிழின த்தை நிரந்தர விரோதிகளாக்குவதற்கான செயலாகவே அமையும்.
இனவாதத்தை துரும்பாகப் பயன்படுத்தும் அரசியல் தந்திரங்களில் ஒன்றுதான் புலம்பெயர் தமிழர்கள் மீதான எதிர்ப்புப் பிரசார மென்பதை மறுப்பதற்கில்லை. பொதுத் தேர்தலை இலக்கு வைத்து எதிரணி முன்னெடுக்கின்ற நகர்வுகளில் ஒன்றாகவே புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான பிரசாரமும் நோக்கப்படுகிறது.
புலம்பெயர் தமிழர்கள் சமூகமென்பது தாமாக விரும்பி உருவாகிக் கொண்டதல்ல என்பதை இலங்கையின் பெரும்பான்மை சமூகம் முதலில் புரிந்துகொள்வது இங்கு அவசியம். மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தின் விளைவாகத் தோற்றம் பெற்று படிப்படியாக வளர்ச்சியடைந்து தற்போது சர்வதேச ரீதியில் பலம் பொருந்தியதொரு சமூகமாக புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர்.
நாட்டின் வடக்கு, கிழக்கில் புலிகளின் அச்சுறுத்தலுக்கும் படையினரின் தாக்குதல்களுக்கும் அஞ்சி படிப்படியாக நாட்டைவிட்டு வெளி யேறிய அத்தமிழர்கள் தற்போது பொருளாதார ரீதியிலும் அறிவு ரீதியிலும் பலம் பொருந்திய அமைப்பாக விளங்குகின்றனர். அச்சுறுத் தல் காரணமாக வேறு வழியின்றி, உயிர் வாழ்வதற்கான போராட் டமாகவே அவர்கள் புலம்பெயர் வாழ்க்கையை தமதாக்கிக் கொண்ட னர். இலங்கையில் உள்நாட்டு மோதல்கள் நீடித்ததன் விளைவாக புலம்பெயர் வாழ்க்கையென்பதே நிரந்தரமாகிப் போயுள்ளது.
இலங்கையின் கடந்த கால அரசுகள் புலம்பெயர் தமிழர்களை தமது விரோதிகளாகவே கணித்து வந்துள்ளன. புலம்பெயர் தமிழர்கள் பிரிவினைக்கும் தீவிரவாதத்துக்கும் ஆதரவானவர்களென உள்நாட்டி லும் சர்வதேச ரீதியிலும் கருத்துக்களைப் பரப்புவதில் கடந்தகால அரசுகள் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளன. இலங்கையானது தனது சொந்த மக்களை விரோதிகளாகப் பார்க்கின்றதொரு துரதிர்ஷ்ட நிலைமை தசாப்த காலமாகவே தொடர்ந்து வந்துள்ளது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை எக்காலத்திலும் விரோதி களாக வைத்துப் பார்க்க தென்னிலங்கை விரும்புவதாகவே சிங்கள கடும்போக்காளர்களின் இன்றைய கருத்துகள் புலப்படுத்துகின்றன. புலம்பெயர் தமிழர்களை இலங்கைப் பிரஜைகளென ஏற்றுக்கொள்வதில் இங்குள்ள இனவாத சக்திகளுக்கு உடன்பாடு கிடையாதென்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இவ்வாறான சிந்தனையானது இனவாத வக்கிரத்தின் வெளிப்பாடாகும். புலம்பெயர் தமிழர்களின் ஆதங்கங்களை புரிந்துகொள்ளாத விதத் திலேயே இவ்வாறானதொரு வேற்றுமை சிங்கள மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக தென்னிங்கையில் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற் றம் சிறந்ததொரு திருப்புமுனையாகும். புலம்பெயர் தமிழர்களை நாட்டுப் பற்றாளர்களாக மாற்றம் செய்யும் நகர்வுகள் முன்னெடுக்கப் பட்டிருப்பதை லண்டனில் நடைபெற்ற சந்திப்பு எமக்கு உணர்த்து கிறது.
புலம்பெயர் தமிழர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் இலங் கையில் நல்லிணக்கத்தை மீளக்கட்டியெழுப்ப முடியுமென இலங்கை அரசு நம்புகிறது. அத்துடன் பொருளாதார பலத்துடன் விளங்கும் அவர்களை இலங்கையில் முதலீடு செய்யத் தூண்டுவதும் அரசின் நோக்கமாகும். இங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு புலம் பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதென்பது நல்லதொரு அம்சமாகும்.
உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்ததன் பின்னர் கடந்த சுமார் கால் நூற்றாண்டு காலமாக தென்னிலங்கைக்கும் புலம்பெயர் அமைப் புகளுக்குமிடையே நிலவி வந்த சந்தேகங்கள் படிப்படியாக நீங்கு வதற்கான அறிகுறி தற்போது உருவாகியுள்ளது. வேற்றுமையை தொடருவதால் கிட்டுகின்ற பயன் எதுவுமில்லையென்பதை பெரும் பான்மை சமூகம் புரிந்து கொள்வதே இன்றைய நிலையில் முக்கியம்.