வடமாகாண முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்படும்
வட மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்காக போதைப் பொருள் ஒழிப்பு செயலணியொன்றை ஸ்தாபிக்க தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ள மேற்படி செயலணியினூடாக வட மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு வட மாகாண முதலமைச்சர் விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய மேற்படி செயலணியை ஸ்தாபிக்க பொதுமக்கள் பாதுகாப்பு கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.
வட மாகாணம் போதைப் பொருள் பரிவர்த்தனை நிலையமாக மாறியிருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் போதைப் பொருள் வட பகுதி இளை ஞர்களுக்கு மட்டுமன்றி தென்பகுதி இளைஞர்களுக்கும் விற்பனை செய்யப் படுகிறதென அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தவைர் டாக்டர் திலங்க சமரசிங்க தெரிவித்தார்.
2009 மே மாதத்திற்கு முன்பு வட மாகாணத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறவில்லை. பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் மிக வேகமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
கடந்த கால ஆட்சியின் போது போதைப் பொருட்கள் கொள்கலன்களில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் கடந்த காலத்தைப்பற்றி பேசிக் கொண்டிராமல் போதைப் பொருள் பாவனையை தடுப்பது மிக முக்கியமான தென்றும் அவர் தெரிவித்தார்.
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் 17 முக்கிய புள்ளிகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் 07 பேர் தமிழர்கள். வடமாகா ணத்திற்கு போதைப் பொருளை கொண்டு வருபவர்களும் தமிழர்கள் தான் என்றும் சமரசிங்க தெரிவித்தார்.
வட மாகாணத்தில் தற்போது நிலவும் போதைப்பொருள் பிரச்சினையை தீர்ப்ப தற்கு விசேட பொலிஸ் குழுவொன்றையும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் இந்த வேலைத் திட்டத் திற்கு யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள 05 அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெறப்படும். அவர்களுக்கு விசேட பயிற் சிகளும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
யாழ். மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் போதைவஸ்து ஒழிப்பு குழுக்கள் நிறுவப்படும். மாதம் ஒருமுறை இந்த குழுக்கள் முதலமைச்சரின் தலைமையில் கூடி முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயுமென்றும் அவர் கூறினார்.