வித்தியாவின் கொலை தொடர்பான கருத்தில் ஊர்ஜிதம்
வடக்கில் மீண்டும் பயங்கர வாதம் தலைதூக்குவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம் அவர் செயற்படும் நிகழ்ச்சி நிரல் என்ன வென்பது தெரியவந்துள்ளதாக த. தே. கூட்டமைப்பு தெரி வித்துள்ளது.
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி தொடர் பில் ஆறுதல் தெரிவிக்காத முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கில் வன் முறைகள் தலைதூக்கியிருப்பதாகவும், கடந்த காலங்களில் இவ்வாறே பயங்கரவாதம் உருவானது என்றும் கூறியிருப்பது அவர் என்ன பாதையில் பயணிக்கிறார் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரி வித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் இராணுவத்தினர் ஊடாக போதைப்பொருள் விநியோகம் அதிகரித்திருந்தது. இதன் வெளிப்பாடே தற்பொழுது அங்கு இடம்பெறுகின்ற சமூக விரோதச் செயல்களாகும். இந்த நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியே காரணம்.
இவ்வாறான நிலையில் புங்குடுதீவு மாணவியின் கொலை மற்றும் அதன் பின்னரான மக்கள் போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, வடக்கில் வன்முறைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது எனக் கூறியுள்ளார்.
புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து அமைதியான போராட்ட மொன்றே முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் வட்டுக் கோட் டையைச் சேர்ந்த குழுவொன்று இணைந்து அமைதிப் பேரணியை வன்முறையாக மாற்றியது. இதில் முன்னாள் அரசாங் கத்துடன் இணைந்து செயற்பட்ட குழுவினரும் உள்ளடங்கு கின்றனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.
இந்தச் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது இது ஏற்கனவே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட குழப்பும் முயற்சி என்பது புலனாகிறது. முன்னாள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பதும் இதன் மூலம் பகிரங்கமாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வடபகுதியில் அதிகரித் திருக்கும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களை ஒரே நாளில் கட்டுப்படுத்திவிட முடியாது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்ட காலத் திட்டங்களை வகுத்திருப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
வடமாகாண சபை, அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூக ஆர்வ நிறுவனங்கள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முதற்கட்டமாக விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த் திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தா.