யாழ்ப்பாணத்தில் இன்று சர்வதேச தமிழ் பௌத்த மாநாடு
மித்தபெருமானின் போதனைகளை அடிப்படையாக கொண்டதே பெளத்த மதம் ஆகும். இலங்கை, இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, நேபாளம், மியன்மார், இந்தேனேசியா ஆகிய நாடுகளில் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய மதமாக பெளத்த மதம் மேலோங்கி நிற்கின்றது.
இவற்றைத்தவிர கிறிஸ்தவ மதம் மேலோங்கியிருக்கும் நாடுகளில் கூட பெளத்த மதத்தினரையும் பிக்குகளையும் விகாரைகளையும் நிச்சயம் காணக் கூடியதாகவிருக்கும்.
அந்த வகையில் பெளத்தம் என்பது உலகம் முழுவதுமே பரந்து நடை முறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு மதமாகும். பல்லின மக்கள் வாழ்ந்து வரும் நாடான இலங்கையில் பெரும் பான்மை மக்கள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு மதம் என்ற வகையில் இலங்கை ஒரு பெளத்த நாடாகவே கருதப் படுகிறது.
பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதும் பெளத்த மதம் சிங்களவர்க ளுடையதென்றும் இந்து மதம் தமிழர்க ளுடையதென்றும் தவறான கண்ணோட்டம் மக்களின் மனதில் ஆழமாக வேரூ ன்றியுள்ளது.
மோதல் முடிவுக்கு வந்து சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு அரசாங்கமானாலும் சர்வதேசமாக விருந்தாலும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் குறித்தே அதிக அக்கறையும் அழுத்தமும் காட்டி வருகிறது.
புத்த பெருமானின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் ஞானத்தால் அறிந்தவற்றையும் போதனைகளாக கொண்டதே பெளத்த மதமாகும். இந்த பெளத்த மதத்தை பின்பற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனங்கள் குறித்த வரையறை விதிக்கப்படவில்லை.
பெளத்த மதம் சிங்களவர்களுக்குப் போன்றே தமிழர்களுக்கும் சொந்தமானது. அதன் தத்துவங்களையும் போதனைகளையும் கடைப்பிடிப்பதற்கு எந்தவொரு இனத்திற்கும் விதிவிலக்கு செய்யப்பட வில்லை.
ஆரம்பகாலத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் பெளத்த மதத்தை பரப்புவதில் பெரும் பங்களிப்பு செய்த வர்கள் தமிழர்களாவர். தமிழர்களாலேயே தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு பெளத்த மதம் கொண்டு வரப்பட்டது.
தமிழ் நாட்டில் இன்றும் கூட ஏராளமான தமிழ் பெளத்தர்கள் இருக்கி றார்கள். மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அநேகமான பாகங்களிலும் விகாரைகளிலும் தமிழ் பெளத்த தேரர்களை காணமுடிகிறது. இவர்கள் பாளி மொழியில் பெளத்த மதத்தின் போதனைகளையும் தத்துவங்களையும் கற்று தேர்ந்திருந்தாலும் தெளிவாக தமிழ் பேசக்கூடிய உண்மையான தமிழர்கள்,
சோழ மன்னனின் ஆட்சிக் காலத்தில் இதேபோன்ற தமிழ் பெளத்தர்கள் வடக்கு கிழக்கில் பரந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். பெளத்த மதத்தை பின்பற்றுவது என்பது துறவறம் பூண்டு பிக்குகளாக உருமாறுவது அல்லது காவியுடை அணிவது அல்ல. இம்மக்கள் சாதாரண குடிமக்களாக குடும்ப வாழ்க் கையில் ஈடுபட்டு பெளத்த மதத்தின் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் பின்பற்றி விகாரைகளுக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளனர்.
இவர்களது வழித்தோன்றல்களில் வந்த ஒரு சிலரை தற்போது இங்கு காண முடிந்தாலும் இலங்கையில் தற்போது துரதிஷ்டவசமாக தமிழ் பெளத்தர்கள் இல்லையென்றே கூறவேண்டும். தமிழர்களும் பெளத்த மதத்தை பின்பற்றி வந்தபோதும் காலத்தின் போக்கிலேயே இவ்வாறான தமிழ் பெளத்தர்கள் மறைத்துவிட்டார்களென பண்டிதர்களும், கல்விமான்களும் ஆய் வாளர்களும் மட்டும் அறிந்து வைத்துள்ள உண்மை. சாதாரண குடிமகனை சென்ற டைந்தால் மாத்திரமே இனங்களுக்கிடையி லான நல்லிணக்கத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.
இந்துக்களில் வைஷ்ணவர்களைப் போன்றே புத்தப் பெருமானும் இதற்கு முன்பிருந்தே காலத்துக்கு காலம் பல அவதாரங்களை மேற்கொண்டுள்ளார் என்றே பெளத்தர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். சித்தார்த்த புத்த பெருமானின் போதனைகளையும் தத்துவங்களையும் கொண்டமைந்த பெளத்த மதம் பல்லவர் ஆட்சிக் காலத்தின்போது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சோழர் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பெளத்த மதம் வேரூன்றி காணப்பட்டது.
05 ஆம் நூற்றாண்டளவில் தமிழ் நாட்டிலிருந்த தமிழ் பெளத்தர்கள் இலங்கையிலிருந்த பெளத்தர்களுடன் மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்டிருந் தார்களென வரலாறுகள் கூறுகின்றன.
ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டது போல் இலங்கையில் தற்போது தமிழ் பெளத்தர்கள் இல்லாதபோதும் 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் வாழ்ந்த பெரும்பான்மை தமிழர்கள் பெளத்த மதத்தையே பின்பற்றியிருப்பதாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். எனினும் அக்காலத்தில் அவர்களால் வழங்கப்பட்டு வந்த விகாரைகள், வணக்க ஸ்தலங்கள் இலங்கை தமிழர்களின் வெறும் விழுமி யங்களாகவே கருதப்படு கின்றன. ஆனால் அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட பாரிய பெளத்த விகாரைகள் புத்தர் சிலைகள் மற்றும் பெளத்த மதம் சார்ந்த கட்டுமானங்கள் யாவும் சிங்கள பெளத்தர்களால் கட்டப்பட்டவையாகும்.
வரலாற்றை அலசிப் பார்த்தால் தமி ழர்களுக்கும் பெளத்தர்களுக்குமிடையில் மிகவும் நெருங்கிய தொடர்புகள் இருந்தமையும் பெளத்த மதத்தை வளர்ப்பதற்கும் அதன் போதனைகளை மக்களிடையே கொண்டு செல்வத ற்கும் தமிழர்கள் தான் பெரிதும் பாடுபட் டுள்ளார்கள் என்பது எமக்கு ஆதாரங்களா கின்றன.
இந்துக்கள் எவ்வாறு சமஸ்கிருதத்தை தமது புனித மொழியாக கொள்கிறார்களோ அதேபோன்று தான் பெளத்தர்களும் தமது மதத்திற்குரிய புனித மொழியாக புத்தர் பேசிய பாளி மொழியினையே கையாண்டு வந்தனர்.
தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஐம்பெருங்காப்பியங்களான மணிமேகலை, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி ஆகியவற்றில் பெளத்த சமயத்திற்கு வழங்கியுள்ள முக்கியத்துவ த்திலிருந்து தமிழ் பெளத்தர்கள் பற்றிய வரலாறு எவ்வளவு தூரம் உண்மையானது என்பதனை எம்மால் ஊகித்துக்கொள்ள முடிகிறது.
மணிமேகலை எழுதிய சாத்தனால் இறுதியில் மணிமேகலை என்னும் கதாபாத்திரம் பெளத்த பிக்குணியாக செல்வதாகவே காப்பியத்தை வடிவமைத் துள்ளார். அக்காலத் தமிழர்கள் பற்றின்மை, நிலையாமை ஆகியவற்றை நன்கு உணர்ந்திருந்ததன் வி¨ளைவினாலேயே பெளத்த மதம் மீது தாமாகவே ஈர்க்கப் பட்டிருக்கலாம் போலும்.
இதேபோன்று தமிழ் இலக்கண நூல்களான வீரசோழியம், சித்தாந்ததொகை மற்றும் திருப்பதிகம் போன்ற பல நூல்களில் தமிழ் பெளத்த பிக்குகளின் பங்களிப்பினை காணமுடிகின்றது.
சீனாவை சேர்ந்த சுவான் சங் என்னும் சுற்றுலா பயணியொருவர் இந்தியா சென்றிருந்தபோது அங்கே காஞ்சிபுரத்தில் சுமார் 300 இலங்கை பிக்குகள் விகாரைகளில் தங்கியிருந்ததாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பெளத்த தர்மத்தின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டே திருக்குறள் எழுதப்பட்டிருப்பதாகவும் சில வரலாற் றாசிரியர்கள் கூறுகின்றனர்.
காஞ்சிபுரத்தை ஆட்சிசெய்த பல்லவ மன்னனின் மகனான ‘போதிதர்மா’ கூட ஒரு தமிழ் பெளத்த பிக்குவென்றே நம்பப்படுகின்றார். இவர் பெளத்த மதம், மருத்துவம் மற்றும் தனது கலையாற்றலை பிறநாட்டவருக்கு தெரியப்படுத்தும் நோக்கிலேயே தென்னிந்தியாவிலிருந்து கடல்வழி மார்க்கமாக தூர கிழக்கு நாடுகளுக்கு சென்றதாக தெரியவருகிறது.
இவ்வாறாக பண்டைய காலத்தில் பெளத்த மதத்தின் ஆரம்ப ஊற்றாக தமிழர்களே இருந்துள்ளனர். பெளத்தம் என்பதும் சிங்களவர்கள் என்பவதும் இருவேறு விடயங்களாகும்.
இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ‘கருணா’ என்னும் தொனிப்பொருளில் இந்த ஒருநாள் சர்வதேச கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொள் வதற்காக இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 200 பெளத்தர்கள் வருகை தரவுள்ளனர். இவர்களில் 65 பேர் தமிழ்நாட்டிலிருந்து வரும் தமிழ் பெளத் தர்களாவர்.
உண்மையில் அரசியலில் குதித்திருக்கும் பெளத்த தேரர்களின் ஆவேசமான பேச்சிலும் செயற்பாடுகளிலும் கலங்கிப் போயிருக்கக் கூடிய மக்களுக்கு பெளத்த தர்மத்தின் போதனைகளையும் பிக்குகளின் பக்குவ நிலையையும் புரிய வைப்பதற்கு இவ்வாறான பெளத்த மாநாடுகள் வழிசமைக்குமென நம்பிக்கை வைக்க முடியும்.
தமிழ் பெளத்தர்கள் என்ற விடயத்திற்கும் மேலாக பெளத்த சமயமும் இந்து சமயமும் அநேகமான இடங்களில் ஒத்த கருத்தினையே கொண்டுள்ளது. புத்தர் அவதரித்தது ஒரு இந்து நாட்டில், வைஷ்ணவர்கள் கிருஷ்ணா பகவானின் ஒரு அவதாரமாக புத்த பகவானை கருதுகிறார்கள்.
அத னைத் தவிர பெளத்த சமயம் வலியுறுத்தும் அளவில்லா அன்பு, பிற உயிர்கள் மீது கருணை, நிலையின்மை, பற்றின்மை ஆகிய விடயங்களே இந்து சமயத்திலும் குறிப்பாக பகவத்கீதையிலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமென்பது பலவந்தமாக செய்ய இயலாதது. அரசாங்கம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சித் திட்டங்களால் முழுமையடைய முடியாதது ஒவ்வொரு வரும் மானசீகமாக இதை உணர்ந்து கடைப்பிடிக்கும் பட்சத்தில் மாத்திரமே இந்த நல்லிணக்கம் சாத்தியமடையும்.