22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

இரு வாரங்களுக்குள் அரசியலமைப்பு சபை

19ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு உட்பட்ட அரசியலமைப்புச் சபை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்படும் என அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

 அரசியலமைப்புச் சபையை அமைப்பதன் ஊடாக 19ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளடங்கலாக 7 பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் மூன்று சுயாதீன உறுப் பினர்களைக் கொண்டதாக அரசியலமைப்புச் சபை அமையப்பெறவுள்ளது.

அரசியலமைப்புச் சபையை அமைப்பதற்கான சட்டத்தேவைகள் யாவும் பூர்த்திசெய்யப்படும் எனக் குறிப்பிட்ட நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இந்த மாத இறுதிக்கு முன்னர் அரசியலமைப்பு சபையை அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டமூலத்தில் சுயா தீன ஆணைக்குழுக்கள் மற்றும் அரசிய லமைப்புச் சபை ஆகியவற்றை நியமிப்பது மிகவும் முக்கியமான விடயங்களாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.