இலங்கைக்கு 1987 ம் ஆண்டில் இந்திய அமைதிப்படையை அனுப்பியது, உயர்நிலை கொள்கை ரீதியிலான தோல்வி யாகும் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், முன்னாள் இராணுவத் தலைமை தளபதி யுமான வி.கே.சிங் கூறியுள்ளார்.
இது குறித்து உத்தரகண்ட் மாநிலம் ராய்ப்பூரில், “தைரியமும், தண்டனையும்” என்ற தனது சுயசரிதை தொடர்பான நிகழ்ச்சியில் வி.கே. சிங்க செவ்வாய்க்கிழமை பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சண்டையில் இலங்கை அரசுடனான உடன்படிக்கையின் மூலம் இந்தியா நுழைந்தது, கொள்கை ரீதியில் தோல்வியாகும். அதனால் இந்தியாவால் புலிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பல்வேறு காரணங்களால், இந்தத் தோல்வி ஏற்பட்டது. அமைதியை ஏற்படுத்த முடியாமல் இந்திய இராணுவம் போரில் சிக்கிக் கொண்டது.
ஒருகட்டத்தில், இந்திய அமைதிப் படைக்கு எதிராக அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா, விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டார்.
மாவோயிஸ்ட் பகுதிகளில் இராணு வத்தைக் குவிக்க எதிர்ப்பு: மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்திய படைகள் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.
கடந்த 2010 ம் ஆண்டு சத்தீஸ்கரில் 76 இராணுவ வீரர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.
அந்த நேரத்தில், மாவோயிஸத்துக்குப் பின்னணியில் உள்ள காரணத்தை நாம் ஆராய வேண்டும் என்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கூறினேன்.
மாவோயிஸ் பகுதிகளில் இராணுவத்தினரைக் குவிப்பதால், இராணுவத்தின் மீதான நன்மதிப்பு களங்கப்படுகிறது என்றார் வி.கே. சிங்.