15012025Wed
Last update:Tue, 07 Jan 2025

19; திருத்தம் 20ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைப்பு

President2அரசியலமைப்பின் 19 வது திருத்தம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19 வது திருத்தம் சமர்பிக்கப்பட்டு சபையில் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலனறுவை ‘புலதிசி’ தேசிய விஞ்ஞான கல்வி பீடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை முறையாக நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, இக்காலங்களில் அரசியலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை சம்பந்தமாகவே பேசப்படுகின்றன. இதற்கிணங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையிலுள்ள மேலதிக அதிகாரங்களை நீக்கும் வகையில் 19 வது அரசியலமைப்புத் திருத்தம் இம்மாதம் 20ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.

இதன்மூலம் நாட்டில் அரசியல் ரீதியாக எழுந்துள்ள நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய முடியும் என எண்ணுகின்றேன். தற்போது அரசியலிலும் பாராளுமன்றத்திலும் நிலவும் சர்ச்சைகள் மற்றும் சிக்கல்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலோடு நிறைவு பெறும். நாம் கட்சித் தலைவர்களோடு நேற்றுக் கலந்துரையாடி 19 வது திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் 20ம் திகதி சமர்பிப்பதற்கான முடிவை எடுத்தோம். இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் முடிவும் கிடைத்துள்ளது.

அதில் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்படுவதால் பாராளுமன்றத்துக்கு உரித்தாகும் அதிகாரங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொலனறுவை மாவட்டத்தில் விளையாட்டு கழகங்கள் மற்றும் பாடசா லைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை கையளித்து அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் ஏனைய தேசிய விளையாட்டு மைதானங்களைப் போன்று பொலனறுவை தேசிய விளையாட்டு மைதானமும் அனைத்து வசதிகளையும் கொண்டதாக மேம்படுத் தப்படும்.

அத்துடன் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் அனைத்து கிராமிய விளையாட்டு மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படும். பொறுமை, நல்லொழுக்கம் போன்ற நற்குணங்கள் தலைமைத்துவத்துக்கான சிறந்த குணங்களாகும். உள்ளாழ ஆரோக்கியமும் இதில் குறிப்பிடத் தக்கதாகும். தமது விளையாட்டரங்கு, மாகாண மட்டம் நாடளாவிய மட்டம் என்பவற்றைக் கடந்து சர்வதேச ரீதியில் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாட்டு வீரர்கள் தம்மைத் தயார் படுத்திக் கொள்வது முக்கியமாகும்.