16072024Tue
Last update:Wed, 08 May 2024

பொங்கல் பண்டிகைக்கு முன் தமிழக மீனவர்கள் 104 பேர் விடுதலை: இலங்கை அமைச்சர் அறிவிப்பு

Tamil DailyNews 5811687707902திருச்சி: பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவர் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து வருகிறது. படகுகளும் பறிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 76 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 20 பேரை தாக்கி இலங்கை கடற்படை கைது செய்தது. 4 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 12 மீனவர்கள் மன்னார், ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அனுராதபுரம், யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாகப்பட்டினம் அக்கரைப் பேட்டையை சேர்ந்த 8 மீனவர்களை மட்டும் முல்லைத்தீவு போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று விமானம் மூலம் தமிழகம் அழைத்துவரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இதேபோல் அனைத்து மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோாி மீனவர்கள் கோாிக்கை விடுத்தனர். 104 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் அமரவீரா நேற்று அங்குள்ள பத்திாிகைக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’ புத்தாண்டுக்கு முன்னதாக மீனவர்கள் விடுவிப்பது பற்றி உயர்அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. பொங்கலுக்கு தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.மீனவர்கள் விடுதலைக்கான அறிவிப்பு எப்போது வரும் என மீனவர்களின் உறவினர்கள் எதிர்பார்த்துள்ளனர். படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.