13122024Fri
Last update:Wed, 20 Nov 2024

ரூ. 1,500 இற்கு மேல் நிலுவை இருந்தால் நீர் வெட்டு

water cutகுடிநீர் இணைப்புக்களைப் பெற்று 1500 ரூபாவிற்கு மேல் நிலுவைக் கட்டணத்தினைச் செலுத்தாமல் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் இணைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(25) முதல் துண்டிக்கப்படவுள்ளதாக கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். முனவ்வர் தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளான கல்முனை, கல்முனைக்குடி, இஸ்லாமபாத்,  நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு மற்றும் மணல்சேனை ஆகிய பிரதேசங்களிலேயே இந்நீர் துண்டிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புக்களைக் கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசங்களில் ரூபா 180 இலட்சம் இற்கும் மேற்பட்ட தொகை நிலுவையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசங்களில் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் நிலுவைத் தொகை, மற்றும் சராசரி பாவனையின் அளவு போன்றவற்றின் அடிப்படையிலேயே குறித்த நீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.