18042025Fri
Last update:Tue, 07 Jan 2025

ஞானசார சரண்; பெப்ரவரி 09 வரை மறியலில்

gnanasaraபதிப்பு 02

சரணடைந்த ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஹோமாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் பெப்ரவரி 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பதிப்பு01

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் ஹோமாகம பொலிஸில் சரணடைந்தார்.

நேற்றைய தினம் (25) ஹோமாகம நீதவான் நீதிமன்றில், காணமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அவரது மனைவி சந்த்யா எக்னலிகொடவை திட்டியதன் மூலம், நீதிமன்றை அவமதித்தாக தெரிவித்து, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஞானசார தேரர் வெளிநாடு செல்ல முயற்சிப்பாராயின் அவரை கைது செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யுமாறு பொலிஸாருக்கும், சுங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.