04 ஆணைக்குழுக்களுக்காக அரசியலமைப்பு சபையினால் பரிந்துரை செய்யப்பட்ட உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் நிதி ஆணைக்குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக திரு.மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், திரு.என்.பி.அபேசேகர, திரு.ரத்னஜீவன் ஹூல் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவார்கள்.
தேசிய பெறுகை ஆணைக்குழுவின் தலைவராக திரு.ஏ.எம்.பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக டி.என்.ஐ.எப்.ஏ. விக்கிரமசூரிய, பீ.ஈ.ஆர்..சீ. வெடிக்கார், பி.ஏ.டி.சீ.ஆர். பெரேரா, மெய்யன் வாமதேவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக திரு.கனகரத்னம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் கலாநிதி அனிலா டயஸ் பண்டாரநாயக்க, பேராசிரியர் சாஹூல் ஹமீட் ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவார்கள்.
நிதி ஆணைக்குழுவின் தலைவராக திரு.உதித்த ஹரிலால் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளதுடன், வேலுப்பிள்ளை கனகசபாபதி, எம்.எம்.சப்ஹூல்லா ஆகியோரும் பதவி வழியாக மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.