CHOGM - 2015 ஜனாதிபதி இன்று மோல்டா பயணம்

common logoபொதுநலவாய நாடுகளின் தலை வர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று 26 ஆம் திகதி மோல்டா நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

மோல்டா நாட்டில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர் களுக்கான மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவி மோல்டா நாட்டு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இலங்கையே தற்போது பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவப் பொறுப்பை வகித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

மோல்டாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு இன்று 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை தலைநகரில் நடைபெறவுள்ளது.

தெற்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான மோல்டா, பொதுநலவாய அமைப்பு நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நாடுகளில் ஒன்றாகும்.