29032024Fri
Last update:Mon, 04 Mar 2024

ரவிராஜ் படுகொலை: 8 வருடங்களின் பின் சூத்திரதாரிகள் கைது

* 3 கடற்படை வீரர்களும் தடுத்து வைப்பு

* சீ.ஐ.டி. விசாரணைகளில் பல தகவல்கள் அம்பலம்

tamilnewsதமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புள்ள மூன்று கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதில் ஒருவர் மாத்திரமே கடற்படையில் பணியாற்றுவதோடு ஏனைய கடற்படை வீரர்கள் இருவரும் முன்பு கடற்படையில் பணியாற்றியவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சந்தேக நபர்கள் கைதானதோடு இவர்கள் குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப் படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2006 நவம்பர் 10 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் நாரஹேன்பிட்டிய பகுதியி லுள்ள அவரது வீட்டிற்கருகில் வைத்து இனந்தெரியாத குழுவினால் சுட்டுக் கொலை செய்யப் பட்டார். இதன்போது அவரது மெய்ப் பாதுகாவலரும் கொல் லப்பட்டார். தனது ஜிப்பினுள் வைத்து அவர்கள் இருவரும் சுடப்பட்டதோடு வாகனத்தில் பல துப்பாக்கி சன்னங்கள் காணப்பட்டன.

அன்றைய தினம் காலை தனியார் தொலைக்காட்சி யொன்றில் இடம்பெற்ற நேர்காணலின் பின்னர் வீடு திரும்பிய அவர் உடைகளை மாற்றிக் கொண்டு வாகனத்தில் அலுவலகம் நோக்கி செல்கையிலே சுட்டுக்கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த தலைக்கவச மணிந்த இருவர் தொடர்ச்சியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின்னர் தப்பிச் சென்றனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மெய்ப்பாதுகாவலர் ஸ்தலத்திலே கொல்லப்பட்டதோடு நடராஜா ரவிராஜ் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனும திக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இந்த கொலை நடைபெற்று 8 வருடங்களுக்கு மேலாகியும் எவரும் கைதுசெய்யப்படவோ உரிய விசாரணை மேற்கொள்ளப்படவோ இல்லை என பரவலாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, நடராஜா ரவிராஜ் எம்.பி. அடங்கலான கடந்த காலத்தில் இடம் பெற்ற அநேக கொலைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பித்தது.

சீ. ஐ. டி. மேற்கொண்ட விசாரணைக ளையடுத்து நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புள்ள 3 கடற்படை வீரர்களும் கைதானதோடு இவர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொலையுடன் தொடர்புள்ள பல தகவல்கள் விசார ணையின் மூலம் அம்பலமாகும் என எதிர்பார்க்கப் படுவதோடு இந்த கொலைகளுடன் தொடர்புள்ள மேலும் நபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்படி 3 சந்தேக நபர்களும் நடராஜா ரவிராஜின் கொலை மட்டுமன்றி கடத்தல் சம்பவமொன்று தொடர்பிலும் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் கூறினர். 3 கடற்படை வீரர்களும் கைதான இடம், பணியாற்றிய முகாம் போன்ற தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.