பதுளையில் 412 இடங்கள் மண் சரிவு அபாயம்

பதுளை மாவட்டத்தில் மண் சரிவுக்குள்ளாகும் 412 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக பதுளை மாவட்ட பிரதேச செயலாளர் நிமால் அபேசிங்க தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான விளக்கங்களை, பதுளை மாவட்ட பிரதேச செயலாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழை நூறு மில்லி மீட்டருக்கு மேல் காணப்படும் பட்சத்தில் பாரிய மண் சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே இருந்து வருகின்றன.

இத்தகைய அனர்த்ங்கள் ஏற்படும் அபாயம் இருக்கும் இடங்களிலிருந்து மக்களை இடம்பெயர வைக்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

பதுளை மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களிலும் ஆறுகள், நீரோடைகள் அண்மையில் இருந்து வரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுள்ளேன்” என்றார்.

தற்போது பெய்துவரும் பெரும் மழையினையடுத்து அல்துமுல்லை பகுதியின் நிக்கபொத்த இறப்பர் தோட்டமொன்றில் ஐந்து ஏக்கர் விஸ் தீரணமுள்ள பூமி மண்சரிவிற்குள்ளா கியுள்ளது.

இம் மண் சரிவினையடுத்து மூன்று வீடுகளில் வசித்து வந்த பன்னிரண்டு பேர் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடமொன்றில் குடியமர்த் தப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பதுளை மாவட்ட பிரதி இணைப்பாளர் ஈ. எல். எம். உதயகுமார தெரிவித்தார்.

இம் மண் சரிவினால் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. அத்துடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வானூர்திகள் வரவழைக்கப்பட்டு அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய கட்டட ஆய்வகத்தினரால் மண் சரிவிற்குட்பட்ட பகுதி பரிசீலனைக் குட்படுத்தப்பட்டு வருகின்றது. எல்ல - வெள்ளவாயா பிரதான பாதை யில் கற் பாறைகள் சரிந்த வண்ணமிருப்பதால் அப்பாதையை பாவிப்பவர்கள் மாற்றுப் பாதைகளை பாவிக்கும்படி எல்ல பொலி சார் வாகன சாரதிகளைக் கேட்டுள்ளனர்.