26சு.க உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவு; அமைச்சுக்களும் ஏற்பு

cabinet 38011 கெபினட் அமைச்சர்கள்

05 இராஜhங்க அமைச்சுக்கள்

10 பிரதியமைச்சுக்கள்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பௌஸி பதவியேற்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் நேற்று அரசாங்கத்தில் இணைந்துகொண்டதோடு அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.இதற்கமைய அமைச்சரவை அந்தஸ்துள்ள 11 அமைச்சுப் பொறுப்புக்களும், 5 இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களும், 10 பிரதி அமைச்சுப் பொறுப்புக்களையும் இவர்கள் ஏற்றுள்ளனர்.

 

26 பேர் புதிய அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக்கொண்டதோடு, தற்போதுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 40 (11+29) ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 19 (5+14)ஆகவும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 23 (10+13) ஆகவும் அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய அமைச்சர்கள் பொறுப் பேற்றுக்கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிஸ்தர்கள் சிலர் அரசாங்கத்தில் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்றுக் காலை களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கூறியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் வரலாறொன்று பதியப்பட்டிரு ப்பதாக அவர் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையிலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 26 பேர் நேற்றையதினம் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். புதிய அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு,

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

ஏ.எச்.எம்.பெளசி : அனர்த்த முகாமைத்துவம்

எஸ்.பீ.நாவின்ன : தொழில்

பியசேன கமகே : திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி

சரத் அமுனுகம : உயர்கல்வி, ஆராய்ச்சி

எஸ்.பி.திசாநாயக்க : கிராமிய பொருளாதார விவகாரம்

ஜனகபண்டார தென்னக்கோன் : மாகாணசபை, பிரதேச அபிவிருத்தி

பீலிக்ஸ் பெரேரா : விசேட திட்டம்

மஹிந்த யாப்பா அபேவர்த்தன : பாராளுமன்ற விவகாரம்

ரெஜினோல்ட் குரே : விமான சேவை

விஜித் விஜிதமுனி சொய்சா : நீர்ப்பாசனம்

மஹிந்த அமரவீர : கடற்றொழில்

இராஜாங்க அமைச்சர்கள்

பவித்திரா வன்னியாராச்சி : சுற்றாடல்

ஜீவன் குமாரதுங்க : தொழில்

மஹிந்த சமரசிங்க : நிதி

சீ.பீ.ரத்நாயக்க : பொது நிர்வாகம், ஜனநாயக நிர்வாகம்

டிலான் பெரேரா : வீடமைப்பு, சமுர்த்தி

பிரதி அமைச்சர்கள்

திஸ்ஸ கரலியத்த : புத்தசாசன, ஜனநாயக நிர்வாகம்

தயாசிறித திசேரா : கடற்றொழில்

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய : உள்நாட்டு விவகாரம்

லக்ஷக்மன் செனவிரட்ன : அனர்த்த முகாமைத்துவம்

லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன : விமான சேவை

லலித் திசாநாயக்க : நீர்ப்பாசனம்

ஜகத் புஷ்பகுமார : பெருந்தோட்டக் கைத்தொழில்

லசந்த அழகியவண்ண : கிராமிய பொருளாதார விவகாரம்

சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே : உயர்கல்வி, ஆராய்ச்சி

சாந்த பண்டார : தகவல் ஊடகம்