உலகின் பெரிய நீல மாணிக்கம்; சாதனை முறியடிப்பு

world largest blue sapphire found in elaheraஉலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம் எனும் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

 அண்மையில், இச்சாதனைக்குரிய நீல மாணிக்கக்கல் இரத்தினபுரி நகரின் அகழ்வொன்றிலிருந்து பெறப்பட்ட நிலையில், அச்சாதனை மீண்டும் இலங்கையினாலேயே முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 தற்போது பெறப்பட்டுள்ள நீல மாணிக்கம்  2476.66 கரட்களைக் கொண்டுள்ளதோடு, இது 486 கிராம்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 பேருவளையைச் சேர்ந்த மாணிக்க வர்த்தகர் ஒருவரே இதற்கு சொந்தக்காரர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த மாணிக்கக் கல், பொலன்னறுவையின் எலஹெர பகுதியிலிருந்து பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட மாணிக்கம் 1404.49 கரட்களைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.