வடக்கு மருத்துவக் கல்லூரி: முதலீடுகளுக்கு வரவேற்பு

tkn luxman kiriella ndk 01வடக்கில் தனியார் மருத்துவ கல் லூரியை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக விருக்கிறதென பாரா ளுமன்ற பிரதம கொறடாவும் உயர் கல்வி அமைச்சரு மான லக்ஷ்மன் கிரியெல்ல பாரா ளுமன்றத்தில் தெரிவித்தார்.

 அதற்கான முதலீடுகள் கிடைக்கும் பட்சத்தில் மேலதிக ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போது தனியார் மருத்துவக் கல்லூரியின் அவசியம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிவமோகன் உரையாற்றுகையில்,

குறுக்கிட்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். மருத்துவ கல்லூரி மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்களா? என கேள்வி எழுப்பிய அமைச்சர் கிரியெல்ல, அந்த மாணவர்களுடன் விரிவாக கலந்து பேசி முடிவை தனக்கு அறியத்துமாறும் கேட்டுக் கொண்டார்.