த.வி.கூ வில் இணைந்ததாக கருணா ஊர்ஜிதம்

18 1437194525 vinayagamoorthy muralitharaபேச்சுவார்த்தையின் இறுதியிலேயே தீர்மானித்தேன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் களில் ஒருவரான விநாயக மூர்த்தி முரளிதரன் தமிழர் விடுதலைக் கூட்ட ணியில் இணைந்து கொண்டு ள்ளதாக நேற்று அறிவித்தார்.

 கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் ராஜபக்ஷ அரசில் பிரதி அமைச்சராக பதவி வகித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்வது தொடர்பாக கருணா அம்மான் கட்சியின் செயலாளர் வீ. ஆனந்த சங்கரியை பலதடவைகள் சந்தித்து பேசியதாகவும் தெரி வித்தார்.

வீ. ஆனந்தசங்கரியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை யின் இறுதியிலேயே இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் கருணா அம்மான் தெரிவித்தார். இனிவரும் அரசியல் நடவடிக்கைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாகவே மேற்கொள்ளவுள் ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் உட்பட பாராளுமன்ற தேர்தலிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழேயே தமது வேட்பாளர்களை கள மிறக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட் டார்.

எவ்வாறாயினும் கருணா அம்மான் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் தனக்கு அறியத்தரவில்லை என்று வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.