சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள்

parliament 1சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சிறி ஹெட்டிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

 அதன் ஏனைய உறுப்பினர்களாக வை.எல்.எம். ஷவாஹிர், அன்டன் ஜெயநாதன், எம்.பீ.எச். மனதுங்க, சாவித்ரி விஜேசேகர நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் 09 இற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆணைக்குழுக்களை அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பு, 10 பேரைக் கொண்ட அரசியலமைப்பு சபையினால் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.