பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடந்த இந்த வழிபாடுகளின் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், வீ. இராதாகிருஷ்ணன் உட்பட அமைச்சர்கள் எம்.பிக்கள் கலந்துகொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்.