முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது

024 1140x803வருடாந்த பொப்பி தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் இன்று காலை (07) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

இலங்கை முன்னாள் படைவீரர்களின் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் கே.ஏ குணவீர ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பொப்பி மலரை ஜனாதிபதிக்கு அணிவித்ததன் மூலம் வருடாந்த பொப்பி தினத்திற்கான செயற்பாட்டை ஆரம்பித்துவைத்தார்.

இரண்டாவது உலகப்போரின் ஒரு இராணுவ வீரரான எச்.ஜீ.பீ ஜயசேகரவினால் எழுதப்பட்ட “How Japan Bomb Tiny Sri Lanka” என்ற நூலும் நூலாசிரியரினால் இந்நிகழ்வின் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை முன்னாள் படைவீரர்களின் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரியர் அட்மிரல் எஸ். சமரதுங்க, பொருளாலர் கேர்னல் எம். அமரகோன், உபதலைவர்களான கேர்னல் எஸ்.கன்கொட, விக்டர் ஜெயராஜ் ஆகயோரும் கலந்துகொண்டனர்.