அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு எதிர்ப்பு – எதிர்க்கட்சித் தலைவர்

againstto increase ministersஎதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, முதல் முறையாக ஆர். சம்பந்தன் சபையில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக அறிவித்தார்.
 
1.2 பில்லியன் சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 65 அமைச்சர்களும் 38 இராஜாங்க அமைச்சர்களுமே உள்ளனர் என அவர் இதன்போது சுட்டிக் காட்டினார்.
 
தான் இந்த எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த அவர், ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செயற்படுவேன் என உறுதியளித்தார்.