19ஆவது திருத்தம் குறித்து 27 , 28 விவாதம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பிலான விவாதத்தை எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

19ஆவது திருத்த சட்டமூலத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு காலஅவகாசம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சி கோரியதையடுத்தே, விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது.

ஏப்ரல் 20, 21ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்த அரசாங்கம் ஆரம்பத்தில் எதிர்பாத்திருந்திருந்தது. எனினும், விவாதம் இன்று வரையிலும் நேற்று பிற் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இரண்டு நாட்கள் விவாதத்தின் பின்னர் திட்டசட்டமூலம், 28ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும்.

19ஆவது சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்கள் அடங்கிய பிரதிகளை அரசாங்கம் ஏற்கெனவே விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.