சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டிய கொடி தினம் 15ம் திகதி முதல் 22ம் திகதிவரை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் முதலாவது கொடி நேற்று ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இது தொடர்பான நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விழிப்புலனற்ற ஒருவருக்கு வெள்ளைப் பிரம்பொன்றை கையளிக்கிறார்.