24042024Wed
Last update:Thu, 18 Apr 2024

தமிழர் பிரச்சினையை தீர்க்க அதிகாரங்கள் பகிரப்படுவது அவசியம்

mano ganeshan1 28032016 kaa cmyதமிழர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும். அதன் மூலமாகவே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும் என மொழிகள், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.


தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

col1210547615 4075884 20032016 kllதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா நேற்று கொழும்பு பி.எம்.ஐ.சி.எச் இல் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்று அழைத்துச் செல்லப்படுகிறார். அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல, பிரதியமைச்சர் தயா கமகே, உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் உட்பட அதிதிகள் அருகில் காணப்படுகின்றனர்.

முதல் 10 இடங்களில் 9 இடங்களை பெற்று கொழும்பு மாவட்டம் சாதனை

02 sa 012015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

ஆராய ஜேர்மன், ஜப்பான் நிபுணர் குழு இன்று வருகை

col1 113417 1155546673 4075759 20032016 mffநாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்புக்கள் குறித்து ஆராய்வதற்காக ஜேர்மன், ஜப்பான் நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வருகிறது. இக்குழுவினர் இன்றையதினம் வெடிப்புக்கள் இடம்பெற்ற உப மின்நிலையங்கள் உட்பட 30 உபமின்நிலையங்களுக்குச் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராயவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் போகத்தில் நெல் கொள்வனவுக்கு நாடு பூராகவும் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்துமாறு உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு

Presidential Media Unit Common Banner 1எதிர்வரும் போகத்தில் தாமதமின்றி நெல் கொள்வனவை மேற்கொள்ளும்வகையில் நாடு பூராகவும் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.