19042024Fri
Last update:Thu, 18 Apr 2024

19 சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை

மக்களின் இறைமை, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துகிறது

சட்டமா அதிபர் நேற்று உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

முன்மொழியப்பட்டிருக்கும் 19வது திருத்தச்சட்டமூலம் நாட்டு மக்களின் இறை மையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால் இது தொடர்பில் சர்வஜன வாக் கெடுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லையென சட்டமா அதிபர் யுவாஞ்சன் வசுந்தரா விஜேதிலக நேற்று உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை சட்டமா அதிபர் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.


ரவிராஜ் படுகொலை: 8 வருடங்களின் பின் சூத்திரதாரிகள் கைது

* 3 கடற்படை வீரர்களும் தடுத்து வைப்பு

* சீ.ஐ.டி. விசாரணைகளில் பல தகவல்கள் அம்பலம்

tamilnewsதமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புள்ள மூன்று கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

எம்.பிக்களின் தொகை அதிகரிப்பில்; தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்

புதிய தேர்தல் முறை யில் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 250 ஆக உயர்த்தப்படு மானால், மத்திய, மேல், ஊவா மாகாணங் களில் பெரும் பான்மை இனத்து மக்கள் மத்தி யில் கலந்து வாழும் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதி நிதித்துவங்கள் பாது காக் கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் நுவரேலியா மாவட்டத்தில் ஐந்து, கொழும்பில் மூன்று, பதுளையிலும், கண்டியிலும் தலா இரண்டு என்ற குறைந்த பட்ச எண்ணிக் கையில் தமிழ் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட இடமிருக்க வேண்டும்.

யாழ் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் விற்பனையை தடுக்க சகலரும் ஒத்துழையுங்கள்: யாழ் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

யாழ் மாவட்டத்தில் மாணவர்களுக்கிடையில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவணையை ஒழிக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டுமென சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது யாழ் மாவட்டத்தில் ஹெரோயின், கேரள கஞ்சா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பாக்கு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதை தடுக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

19வது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவாக மனு தாக்கல்

19வது அரசியலமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு நேற்றைய தினம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.