25042024Thu
Last update:Thu, 18 Apr 2024

இந்திய மீனவர்களே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறல்

தங்கம், போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபாடு; இந்திய கடலோர காவற் படையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவது மட்டுமல்ல இலங்கை மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் இந்திய மீனவர்கள் சேதப்படுத்துகின்றனர். இந்திய மீனவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாலேயே அவர்களை இலங்கை கைது செய்கின்றதென இந்திய கடலோர காவல்படையின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய மீனவர்கள் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.


இலங்கை வீரர்கள், மீட்புப் பணியாளர்களுடன் விமானம் கத்மண்டுவில் தரையிறக்கம்

Earthquake1நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பொருட்டு முப்படை வீரர்கள், மீட்புப் பணியாளர்கள், மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய முதலாவது குழு நிவாரணப் பொருட்களுடன் நேற்றுக்காலை நேபாளத்தின் தலைநகரான கத்மண்டுவை சென்றடைந்துள்ளது.

கொழும்பில் 12 கட்சிகளின் மேதினக் கூட்டங்கள், ஊர்வலங்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 12 கட்சிகளின் மே தினக் கொண்டாட்டங்கள் இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ளன.

19 இன்றும் நாளையும் சபையில் விவாதம்

நாளை பிற்பகல் வாக்கெடுப்பு

அரசியமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கென இன்றும் நாளையும் பாராளுமன்றம் கூடுகிறது. காலை 9.30 முதல் மாலை 6.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்திற்கான விவாதத்தை பாராளுமன்றத்தில் எடுக்க இருந்த நிலையில் மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

நல்லாட்சி அரசு இன்றுடன் 100 நாள் பூர்த்தி

Sr Lanka President logo1ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் இன்று நூறு நாட்களை நிறைவு செய்கிறது. ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசாங்கம் இன்று 23ம் திகதி நூறு நாளைப் பூர்த்தி செய்கிறது.