10 நாட்களில் 14 கோடி வருமானம்

southern expresswayதமிழ், சிங்கள புதுவருட விடுமுறை காலத்தில், தெற்கு அதிவேக சாலையின் மூலம் சுமார் 14 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலத்தில் தெற்கு அதிவேக பாதையில் பயணம் செய்த 4 இலட்சத்து 76 ஆயிரத்து 671 வாகனங்கள் (476,671) பயணம் செய்ததன் மூலம் சுமார் ரூபா 14 கோடி 36 ஆயிரத்திற்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்களில், ஏப்ரல் 16 ஆம் திகதி பி.ப 6.00 மணி முதல் 17ஆம் திகதி பி.ப. 6.00 மணி வரையான காலப்பகுதியில் சுமார் ரூபா 1 கோடி 83 இலட்சத்து 97 ஆயிரத்து 300 இற்கும் (18,397,300) அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு முன்னர் பெற்ற வருமானங்களிலும் பார்க்க, இது மிக அதிகளவான வருமானம் பெற்ற சந்தர்ப்பமாகும் எனத் தெரிவித்தார்.

அக்குறிப்பிட்ட காலப்பகுதியில் 58,477 வாகனங்கள் பயணம் செய்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.